தமிழக மதுபிரியர்களே மறந்து விடாதீர்., இந்தவாரம் இரண்டு நாள் டாஸ்மாக் கடைகள் மூடல்.!
PONGAL 2022 TASMAC
தமிழக அரசால் நடத்தப்படும் மதுபான கடைகள் ஆன, டாஸ்மார்க் கடைகளில் கடைகளில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் மது விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த பொங்கல் பண்டிகையின்போது மது விற்பனை பாதிக்கப்படாத அளவுக்கு, பல்வேறு நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் வருகின்ற 15ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது., மேலும் 16 ஆம் தேதி முழு ஊரடங்கு காரணமாக மது கடைகள் மூடப்படுகின்றன.
தொடர்ந்து இரண்டு நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் நிலை உள்ளதால், மது பிரியர்களுக்கு மது தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க, வருகின்ற 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல் தினத்தன்று கூடுதலான மது விற்பனையை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக மது பாட்டில்களை ஸ்டாக் வைத்து, அதிக விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.