1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ''அபார வெற்றி'' - அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal



விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்னியூர் சிவா இன்று காலை 11 மணியளவில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

அப்போது அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த பின்னர் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருப்பதாவது, 

கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். அப்போது அதிமுக, பாமக, பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 

அந்த நேரத்திலேயே 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அபார வெற்றி அடைந்தது. தற்போது கூட்டணியில் அதிமுக இல்லை எனவே திமுக தான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponmudi says vikravandi byelection dmk won


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->