திடீர் திருப்பம்! சவுக்கு சங்கருக்கு ஜாமீன்! மீண்டும் கைது..மீண்டும் சிறையில் அடைப்பு! - Seithipunal
Seithipunal


அவதூறு வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். அதன் பின்னர் சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் தொடர்பாக குண்டர் சட்டம் போடப்பட்டது.

இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறாக பேசியதாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த மே மாதம் மூன்றாம் தேதி கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரை கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர்  முத்துராமலிங்க தேவர் குறித்தஅவதூறாக பேசிய வழக்கில் இருந்து  ஜாமீன் வழங்க கோரி சவுக்கு சங்கர் தரப்பில் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும் சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தினால் அவர் சிறையில் இருந்து விடுதலை  ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Popular YouTuber savukku Shankar granted bail in defamation case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->