சென்னை மக்களே... மொபைல் சார்ஜ் போட மறக்காதீங்க.. நாளை காலை முதல் மின்வெட்டு..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் சில பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்வெட்டு செய்யப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை பம்மலின் பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்ய திட்டமிட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் விரைந்து முடித்தால் மதியம் 2 மணிக்குள் மின் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை எச்.எல்.காலனி, பாம்பொன் நகர், நேரு நகர், வெங்கடேஸ்வரா நகர், அகத்தேஸ்வரர் நகர், விமன் நகர், லட்சுமி நகர், எம்.ஜி.ஆர்.தெரு, டி.டி.கே.நகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, பாரதி நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மின்வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கான அனைத்தையும் இன்று இரவுக்குள் தயார் செய்து கொள்ளுங்கள். முக்கியமாக செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ளவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power cut in Chennai tomorrow for maintenance work


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->