சென்னை மக்களே.. இன்னும் சற்று நேரத்தில் மின் தடை..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். 

அதன்படி இன்று சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. குறிப்பாக புழல், சூரப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் இன்று முழுமையாக மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மேலும் காவாங்கரை, நாகப்பா எஸ்டேட், சண்முகபுரம் காந்தி மெயின் ரோடு, கே.எஸ் நகர், சக்திவேல் நகர், மகாவீர் கார்டன், நீலகண்டன் நகர், ரெட்ஹீல்ஸ், அம்பத்தூர் சாலை, புழல் சிறைகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின் விநியோகம் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற பிறகு மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power shutdown in various places of Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->