தமிழ் நடிகர்கள் வாய்கள் திறக்கவே திறக்காது! திமுகவை எதிர்த்தா அஸ்திவாரம் ஆட்டம் கண்டிடும்ல! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் பலியான விவகாரம் குறித்து தமிழ் நடிகர்கள் எப்போது  நெஞ்சை புடைப்பார்கள்? என்று, பிரபல திரை விமர்சகரும், அவ்வப்போது அரசியல் நிகழ்வுகளை விமர்சம் செய்துவருமான பிரஷாந்த் ரங்கசுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரின் சமூகவலைத்தள பதிவுகளின் விவரம் பின்வருமாறு:

29 உயிர்கள் .  29 ஏழை குடும்பங்கள் . 
இதை விட என்ன கொடுமை இருக்க முடியும் ?

ஜூன் 19 - கள்ளச்சாராயம் 
ஜூன் 20 - விசச்சாராயம் . என்ன சாராயம்னு கூட இங்க தைரியமா சொல்ல முடியாது . அரசாங்கம் என்ன சொல்லுதோ அத போட்டே ஆவனும் . இவ்வளவு தான் தமிழ்நாட்டின் பத்திரிக்கை சுதந்திரம் !

தி.மு.க - அ.தி.மு.க என்ன செய்தது?

நிறைய நல்லது செய்தது எவ்வளவு உண்மையோ, தமிழர்கள் பெரும்பான்மயோரை பெரும் குடிகாரர்கள் ஆக்கியதும் உண்மை! எப்போது உண்மையான திராவிட மாடல் ஆட்சி? சாராய வருமானத்தை நம்பாமல் மற்ற வருமானங்களை வைத்து ஆட்சி செய்யும் போது!

இந்த கோவன் கோவன்னு ஒரு போராளி கொஞ்ச வருசம் முன்னாடி சாராயத்துக்கு எதிரா சாட்ட வீசிட்டு இருந்தாப்டி . 
அவர பார்த்தீங்களா எங்காச்சும் ? 

தமிழ் நடிகர்கள் எப்போது சமூக அநீதி கண்டு நெஞ்சை புடைப்பார்கள் ? அ.தி.மு.க ஆட்சி இருந்தால் , பா.ஜ.க தப்பு செய்தால்  

தி.மு.க வ எதிர்த்தா அஸ்திவாரம் ஆட்டம் கண்டிடும்னு தெரியும் , அதனால இப்ப இல்ல , எப்ப தி.மு.க ஆட்சி இருந்தாலும் அந்த வாய்கள் திறக்கவே திறக்காது!

இன்று இளைஞர்களாகிய நீங்கள் ஒரே ஒரு உறுதி மொழி எடுங்கள். சாராயத்தை உங்கள் வாழ்வில் அனுமதிக்காதீர்கள். இதை உங்களுக்காக இல்லாவிட்டாலும் , உங்களை நம்பி வாழும் குடும்பத்திற்காக செய்யுங்கள்" என்று பிரசாந்த் ரெங்கசுவாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prashanth Rangaswamy say about Kallakurichi Kallasarayam issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->