உலக சாதனை படைத்த முதல் மாநாடு - பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது. வெற்றிக் கொள்கை திருவிழா என்று பெயர் குறிப்பிட்டு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக பணி செய்து வந்தார்கள். 

இந்த மாநாட்டுக்கு செல்வதற்கு ஐந்து நுழைவு வாயில்களும், வெளியே செல்வதற்கு பதினைந்து வழிப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

இந்த நிலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:- "இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு.

மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது. உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர். மொத்தம் 25லட்சம் பேர் கலந்து கொண்டனர். உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

premalatha vijayakant tweet about dmdk conference


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->