21 தமிழக போலீசாருக்கு ஜனாதிபதி விருது.!
president award to 21 tamilnadu police
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை முன்னிட்டு காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 குடியரசு தின விழாவை முன்னிட்டு, காவல்துறையில் சிறப்பாக செயல்படும் வீரதீர செயல்களுக்கான விருது, மெச்சத்தக்க சேவைக்கான விருது மற்றும் மிக சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கான விருதுகள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் படி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காவலர்களுக்கு 746 விருதுகள் மற்றும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலும் தமிழகத்தில் காவல் ஆய்வாளர்கள் துரைகுமார் மற்றும் ராதிகா உள்ளிட்ட இருவருக்கு, காவல்துறையில் மிக சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கான ஜனாதிபதியின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு ஜனாதிபதியின் மெச்சத்தக்க சேவைகளுக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, காவல் கண்காணிப்பாளர்கள் ஜெயலட்சுமி, ஸ்டாலின், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தினகரன், பிரபாகரன், இணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன், கூடுதல் ஆணையர் வீரபாண்டி, இணை காவல் கண்காணிப்பாளர் பாபு உள்ளிட்ட 21 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
president award to 21 tamilnadu police