பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தனியார் பால் நிறுவனங்கள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக அரசு ஆவின் என்ற பெயரில் பால் பொருட்கள் விற்பனையை செய்து வருகிறது. இதேபோல் பல தனியார் நிறுவனங்களும் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் விலை, செலவு உள்ளிட்டவற்றிற்கு ஏற்ப தாங்களாகவே விலையை நிர்ணயம் செய்கின்றன.

இந்த நிலையில், தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான ஆரோக்யா நிறுவனம் பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப் பொருட்கள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த மாதம் பால், தயிர் விலையை ரூ.2 உயர்த்தியது. இதைத் தொடர்ந்து தற்போது, டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தியுள்ளன.

இந்த புதிய விற்பனை விலை நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில், தற்போது சீனிவாசா பால் நிறுவனம் நாளை முதல் பால் விற்பனை விலை உயர்வை அமலுக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, 500 மிலி பால் பாக்கெட் ரூ.26இல் இருந்து ரூ.27ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மிலி ரூ.30இல் இருந்து ரூ.31ஆகவும், ஒரு லிட்டர் பால் பாக்கெட் ரூ.60இல் இருந்து ரூ.62ஆகவும் உயர்ந்துள்ளது. 

நிறைகொழுப்பு உள்ள 500 மிலி பால் பாக்கெட் ரூ.35இல் இருந்து ரூ.36ஆகவும், ஒரு லிட்டர் பால் பாக்கெட் ரூ.68இல் இருந்து ரூ.70ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

private companies increase milk price


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->