#விழுப்புரம் || தனியார் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு ‘சீல்’.!!
private medical waste treatment plant sealed in Villupuram
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியின் சீல் வைததுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தில் இயங்கி வந்த தனியார் மருந்து கழிவு சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையால் அப்பகுதி மக்கள் 28 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த தகவல் அறிந்த விழுப்புரம் தாசில்தார் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தனியார் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையில் சோதனை செய்தனர். தொழிற்சாலையில் காட்டன் வேஸ்ட் காலாவதியான மருந்து பழைய பேப்பர்களை கொண்டு எரிபொருள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
தொழிற்சாலை இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நேற்று தேர்தலை புறக்கணித்திருந்தனர். இந்த நிலையில் இன்று அந்த ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.
English Summary
private medical waste treatment plant sealed in Villupuram