நட்சத்திர ஹோட்டல்களில் பேக்கேஜ் சிஸ்டத்தில் விபச்சாரம்.. வெளிமாநில அழகிகள் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பல நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சாரம் செய்த வெளிமாநில அழகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து வெளிமாநில அழகிகள் சிலர் விமானத்தில் வந்து ஒரு நாள், இரண்டு நாள் தங்கி விபச்சார தொழில் செய்து வந்துள்ளனர். மேலும், அந்த பெண்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி விபச்சார தொழில் செய்து வந்துள்ளனர். இந்தப் பெண்கள் வாடிக்கையாளர்கள் விரும்பும் இடத்திற்கே சென்று உல்லாச விருந்து படைத்து விட்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்த ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதனை அடுத்து தனிப்படை அமைத்த போலீசார் தியாகராய நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் சோதனை செய்ததில் 4 வெளிமாநில விபச்சார அழகிகளை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை கோர்ட்டு உத்தரவுப்படி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், இந்தப் பெண்களை விமானத்தில் சென்னைக்கு வரவழைத்து ஒப்பந்த அடிப்படையில் ஒரு மணி நேரத்துக்கு அல்லது முழு இரவுக்கு என்று பல பேக்கேஜிங் சிஸ்டத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி ஒரே இரவில் பல லட்சங்களை சம்பாதித்த வந்த ரஞ்சித் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவரை கடந்த 3 ஆண்டுகளாக காவல்துறையினர் தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prostitution in the package system in star hotels


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->