இந்து மதம் குறித்து அவதூறு! பாதிரியாரை கைது செய்யக்கோரி! ஆலய உறுப்பினர்கள் போராட்டம்!
protest by church members in the church premises demanding the arrest of Pastor Francis Calvin
இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கோவை பாதிரியார் பிரன்ஸ் கால்வினை கைது செய்யக்கோரி ஆலய வளாகத்தில் ஆலய உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் கோவை சிஎஸ்ஐ இமானுவேல் ஆலய பாதிரியார் பிரின்ஸ் கால்வின் என்பவர் பாதிரியாராக இருந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 16ஆம் தேதி ஆலயத்தில் ஒரு ஆதாரணை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய பாதிரியா பிரின்ஸ் கால்வின் இந்து மதம் குறித்தும் இந்து மதத்தில் உள்ள நபர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து கோவை பந்தய சாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரியங்கா பந்தய சாலை காவல் நிலையத்தில் பாதிரியார் பிரின்சஸ் கால்வின் மீது புகார் அளித்தார்.
அதன் பின்னர், இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூராக பேசிய கோவை சிஎஸ்ஐ எம்மானுவேல் ஆலய பிரின்ஸ் கால்வின் இந்து சகோதர சகோதரிகளே புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை என மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டார்.
இந்த நிலையில், மத நல்லிணத்தை சீர் குலைக்கும் வகையில் பிரின்சஸ் கால்வின் பேசியுள்ளதால் அவரை கைது செய்யக்கோரி ஆலய வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஆலய உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதிரியா பிரின்ஸ் கால்வின் திருச்சபைக்கு வரும் காணிக்கைகளையும் முறைகேடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
English Summary
protest by church members in the church premises demanding the arrest of Pastor Francis Calvin