டாஸ்மாக் மது பாட்டிலை உடைக்கும் போராட்டம்! நாள் குறித்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி, ஜூலை 15ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு மது பாட்டில்களை உடைக்கும் போராட்டத்தை நடத்த உள்ளதாக, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி தெரிவித்ததாவது, "தமிழக அரசு 500 டாஸ்மாக் மதுக்கடைகளை முடியுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மதுவிலக்குக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக தோன்றலாம்.

ஆனால், ஏற்கனவே மூடப்பட்ட கடைகள், சரிவர விற்பனையாகாத கடைகள் போன்றவைகள் தான் தற்போது கணக்கு காட்டப்பட்டுள்ளன. தமிழக அரசு மூடி உள்ள இந்த 500 டாஸ்மார்க் கடைகளின் விவரங்களில் எந்த வெளிப்படை தன்மையும் இல்லை.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி வருகின்ற ஜூலை மாதம், 15 ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு, பெண்களை முன்னிறுத்தி மது பாட்டில்களை உடைக்கும் போராட்டத்தை புதிய தமிழகம் கட்சி முன்னெடுக்க உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் டாஸ்மார்க் நிறுவனத்தின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜியின் உடல் நலத்தை மேற்கோள் காட்டி அவரின் ஊழலை மறைக்க திமுகவும், தமிழக அரசும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே செந்தில் பாலாஜியிடம் சிபிஐ, ஆடிட்டர் ஜெனரல், அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த முயற்சி செய்து வரும் நிலையில், தமிழக முதல்வர் அவரை காப்பாற்ற நினைப்பது, அவரின் பதவிக்கும், ஆட்சிக்கும் அழகு அல்ல.

உடனடியாக தமிழக முதல்வர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்" என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PT Krishnasamy new TASAMC Protest july


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->