பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அல்ல - நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் முருகானந்தம்..! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு 'அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் அனைத்தும், பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு பொருந்தாது. அரசு அனுமதி பெறாமல், எந்த சலுகைகளையும் அனுமதிக்கக் கூடாது'  என்று உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் முருகானந்தம் தெரிவித்துள்ளதாவது, அரசு ஊழியர்கள் சலுகை தொடர்பான அரசாணைகள் அனைத்தும், பொதுத் துறை நிறுவனம் மற்றும் வாரியங்களுக்கு பொருந்தாது. ஊதிய மாற்றம், பணி சலுகை போன்றவற்றை, அப்படியே தங்கள் ஊழியர்களுக்கு அமல்படுத்தக் கூடாது. அதற்கு, அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

நிதித் துறை ஒப்புதல் பெறாமல் அரசு சலுகைகள் அனைத்தையும் அமல்படுத்துவதால், நிதிச்சுமை கூடுதலாகிறது. இது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அல்ல.எனவே, அரசு ஊழியர் சலுகை அனைத்தையும், அவர்கள் வாங்க முடியாது.

நிறுவனங்கள் தனித்து செயல்படுபவை. எனவே, அவை நிதி நிலையை பொறுத்து முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக, ஏற்கனவே சில வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளன; அவற்றை பின்பற்ற வேண்டும். என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public employees not government employees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->