புதுச்சேரி தியாகிகளுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசு- முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி தியாகிகளுக்கு  இந்தாண்டு  வங்கி கணக்கில் பரிசுப் பொருட்களுக்கு பதிலாக தலா ரூ.3 ஆயிரம் ரொக்கம் அவரவர் வங்கிக்கணக்கில் ஓரிரு நாளில் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தியாகிகளை கவுரவிக்கும் விழா மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தியாகிகளுக்கு இனிப்பு மற்றும் பொன்னாடை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில்  அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் அனிபால்கென்னடி, பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது முன்னதாக விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:நாட்டின் விடுதலைக்கு போராடி தமது இன்னுயிர் நீத்தவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உரிய மரியாதை செலுத்த வேண்டும்என்றும் 
நம் நாட்டின் விடு தலையை பேணி காப்பதுடன், நமது நாட்டின் வளர்ச்சியை விடுதலை போராட்ட தியாகிகள் எண்ணத்தின்படி செயல்பட்டு வருகிறோம் என கூறினார்.

மேலும் புதுவை மாநிலத்தை சிறந்த மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைக ளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றும்  கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் மேம்பட்டுள்ளது என்றும் உள் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பேசிய  முதல்வர் ரங்கசாமி இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கி அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றும்  அனைத்து மாணவர் களுக்கும் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை சிறந்த கல்வி வழங்கப்படுகிறது என பெருமிதம் தெரிவித்தார். 

மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஏதேனும் பரிசு ஒன்று வழங்குவது வழக்கம் என்றும் இந்தாண்டு தியாகிகளின் வங்கி கணக்கில் பரிசுப் பொருட்களுக்கு பதிலாக தலா ரூ.3 ஆயிரம் ரொக்கம் அவரவர் வங்கிக்கணக்கில் ஓரிரு நாளில் செலுத்தப்படும் என்று  முதல்வர் ரங்கசாமி இவ்வாறு அவர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Puducherry CM Rangasamy announces Rs 3,000 cash reward for martyrs 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->