தேசிய அளவில் புதுச்சேரியில் அதிக விபத்துகள்.. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வேதனை!
Puducherry has the highest number of accidents in the country. Lieutenant Governor Kailashnathan
தேசிய அளவில் சாலை விபத்துகளில் உயிர் இழப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று என துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கூறுகையில்:சாலைப் பாதுகாப்பு என்பது சட்டங்களை, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது மட்டும் அல்ல. அதையும் தாண்டி, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. விபத்துகளைத் தடுப்பது, மனித உயிர்களைப் பாதுகாப்பது, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. இதையெல்லாம் உள்ளடக்கியது.
இந்த நிகழ்ச்சியை, விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மட்டும் பார்க்கக் கூடாது. சாலைப் பாதுகாப்பு நடைமுறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் ஒரு முயற்சியாக பார்க்க வேண்டும். அதை நினைவூட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப் படுகிறது.
சாலைப் பாதுகாப்பு பற்றி ஒவ்வொரு ஆண்டும் நாம் பேசிக் கொண்டு இருக்கிறோம். அதைக் குறைக்க முயற்சி எடுத்து வருகிறோம். ஆனாலும், சுமார் 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சாலை பாதுகாப்பை உறுதி செய்வது என்பது ஒரு சவாலான பணிதான். நம்முடைய கூட்டு முயற்சியால் மட்டுமே சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தி, விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் குறைக்க முடியும்.உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கான பேர் சாலை விபத்தில் உயிர் இழக்கிறார்கள். பலர் ஊனம் அடைகிறார்கள். அதனால் சாலை பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்தமான சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் மிகவும் அவசியமான ஒன்று.
சமீபத்திய ஒரு REPORT -படி நமது நாட்டில் 4.6 லட்சம் சாலை விபத்துகள், அதனால் 1.68 லட்சம் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. சராசரியாக, ஒரு மணி நேரத்திற்கு 53 விபத்துகள் 19 உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. துர் அதிஷ்ட வசமாக, இதில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர், பாதசாரிகள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். புதுச்சேரியில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 விலை மதிப்பு இல்லாத உயிர்களை நாம் இழக்கிறோம் என்பது வருத்தமாக இருக்கிறது.
போக்குவரத்து விதிமீறல், ஓட்டுனரின் திறமை இன்மை, வாகனத்தில் குறைபாடு, சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது, குண்டும் இவையெல்லாம் இதற்கு காரணம். குழியான சாலை .
இவற்றை எல்லாம் நாம் சரி செய்ய வேண்டும் என்றால் அனைத்து துறைகளும் ஒன்று இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இதில் அரசு துறைகள் மட்டும் அல்லாமல் தனியார் துறையும் பொதுமக்களும் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும். எல்லாருடைய ஒன்றுபட்ட செயல்பாடு மட்டுமே விபத்துகளை, அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை கணிசமாக குறைக்கும்.
புதுச்சேரி காவல்துறை, அண்மையில், சாலை விபத்துகளில் மரணம் இல்லா புதுச்சேரி இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் HELMET அணிய வேண்டியது அவசியம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஒரு ஆளுநராக மட்டும் அல்லாமல் தனி மனிதனாகவும் என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதால் அந்த இயக்கத்தின் தொடக்க விழாவில் நான் கலந்து கொண்டேன். அப்போது நான் குறிப்பிட்டு இருந்தேன். சாலை விபத்துகளால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். அது நாட்டிற்கு மிகப் பெரிய இழப்பு.
நான் முன்பே கூறியதைப் போல, சாலைப் பாதுகாப்பு என்பது மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். மத்திய அரசின் வழிகாட்டலோடு புதுச்சேரி அரசு சாலைப் பாதுகாப்பை ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 100வது ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதமாக இருக்க வேண்டும் என்ற இலக்கோடு, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வழி நடத்திக் கொண்டு இருக்கிறார்.
அதற்கு நம்முடைய ஒவ்வொருவரின் பங்கு அளிப்பும் அவசியம். வளர்ச்சி அடைந்த பாரதம் 2047" என்ற இலக்கை நாம் விரைவாக எட்ட வேண்டும் என்றால் நம்முடைய மனித வளத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். இதை போன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அதற்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை பள்ளிக் குழந்தைகள், இளைஞர்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியை நாம் தீவரமாக எடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பு நடைமுறையில் மக்களின் பங்கும் பொறுப்பும் அதிகமாக இருக்கிறது. வாகனத்தை ஓட்டும்போது பொறுப்போடு SEAT BELT அணிவது, HELMET அணிவது TRAFFIC சிக்னலை மதிப்பது, TRAFFIC RULES-களை மதிப்பது, SPEED LIMITஐ மதிப்பது எல்லாம் சாலைப் பாதுகாப்பை ஏற்படுத்தும்.
சாலைப் பாதுகாப்பு பற்றி நாம் இன்று எடுக்கும் நடவடிக்கை வளமான, வலிமையான பாரதத்தை, எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் என்பதை நான் இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். நாம் ஒவ்வொருவரும் விழிப்போடு இருந்தால் மட்டும் போதாது. நம்மை சுற்றி இருப்பவர்களையும் விழிப்பு அடைய செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக நாம் இருக்க வேண்டும். சிறுவர்களுக்கும் நம்முடைய நண்பர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக நாம் செயல்பட வேண்டும். நம்முடைய பாதுகாப்பு நம்மிடம் இருந்து தான் தொடங்குகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்.
English Summary
Puducherry has the highest number of accidents in the country. Lieutenant Governor Kailashnathan