புதுக்கோட்டையில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி.? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மத்திய சுகாதார துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் தொற்று ஏற்பட்டுள்ளதா என சுகாதாரத்துறை அதிகாரிகள் விமான நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அண்டை மாநிலமான கேரளாவில் குரங்கம்மை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. குரங்கம்மை பரவி வரும் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு கூட குரங்கமை பாதிப்பே இல்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். 

இதனுடைய கேரளாவை ஒட்டி உள்ள கன்னியாகுமாரிமாவட்டத்தில் 4 பேர் குரங்கம்மை அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் அவர்களுக்கு குரங்கம்மை உள்ளதா.? இல்லையா.? என தெரியவரும். 

இந்நிலையில், புதுக்கோட்டையில் சிங்கப்பூரிலிருந்து வந்து 35 வயது உடைய நபருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. அறிகுறி உடைய நபர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மாதிரிகளும் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pudukkottai one person monkeypox symptoms


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->