வேங்கைவயல் விவகாரம்: இறுதி அறிக்கை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன செய்தி! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புகார் எழுந்தது. 

பட்டியல் இன மக்கள் பயன்படுத்தக்கூடிய அந்த குடிநீர் தொட்டியில், மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் மலம் கலந்ததாக ஒரு சில குற்றச்சாட்டுகள் எழுந்தது மேலும் பெரும் அதிர்வலையை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியது.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க டி என் ஏ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் பட்டியல் இனத்தை சேர்ந்த சிலரும் டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது சர்ச்சையை கிளப்ப, பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி பட்டியல் இனத்தை சேர்ந்த சிலருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த இரண்டு வருடங்களாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை இந்த வழக்கில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, "வேங்கைவயல் சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளாகியும் ஒருவரை கூட கைது செய்ய முடியாதது ஏன் என்று, தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் தீர்க்கமான முடிவை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், வேங்கைவயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Vengaivayal Chennai HC case TNGovt info


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->