வெட்டு, குத்து, கொலை. கொள்ளை விளையாட்டுகள் பாதுகாப்பாக நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு என்பதற்கு பெயர் தான் திராவிட மாடலோ? - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில், ஒரு குற்ற சம்பவம் நடைபெற்று தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குற்றம் சுமத்தலாம்.

சம்பவம் நடைபெற்ற உடனே நடவடிக்கை எடுத்து, வழக்குப்பதிவு செய்து நீதிமன்றம் முன்பு கொலையாளிகள் நிறுத்துகிறார்கள். தனிப்பட்ட முறையில் நடைபெறும் விவகாரங்களை பெரிதுபடுத்த வேண்டாம்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் எல்லா மத வழிபாட்டு தலங்களிலும் அனைத்து மதத்தினரும் பாதுகாப்பான முறையில் வழிபடுகிறார்கள்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என்பதால் தான் நடைபெறுகின்றன" என்று சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்தார்.

இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு பேட்டிக்கு பாஜக தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது சம்கவலைத்தள பக்கம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், "செஸ் ஒலிம்பியாட் போட்டி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என்பதால் தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

ஆனால், வெட்டு,  குத்து,  கொலை. கொள்ளை போன்றவை போட்டி போட்டுக் கொண்டு விளையாட்டாய் பாதுகாப்பாக நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு என்பதற்கு பெயர் தான் திராவிட மாடலோ? என்று அப்பாவுக்கு நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukottai Assembly Speaker Appavu vs BJP Narayanan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->