குடிநீர் தொட்டியில் மலம் | வன்கொடுமை வழக்கில் ஜாமீன் மறுப்பு!
Pudukottai iraiyur issue
புதுக்கோட்டை : முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூரில் உள்ள வேங்கை வாசல் தெருவில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் குடிநீருக்காக உள்ள குடிநீர்த் தேக்கத் தொட்டி குடிநீரைக் குடித்த சிறுவர்கள் உடல் நலன் கெட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவர்கள் குடிநீரால்தான் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். பின்னர் வேங்கை வாசல் குடிநீர்த் தேக்கத் தொட்டியிலிருந்த தண்ணீரை ஆய்வு செய்த போது அதில் மனித மலம் கலந்து இருப்பதை அறிந்து, உடனடியாக இறையூருக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் விரைந்து சென்று நேரில் ஆய்வு நடத்தி உள்ளார்.
ஆய்வில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் சிலர் மலம் கழித்து வந்தது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் தகாத வார்த்தைகளால் பேசியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் சட்டத்தின் கீழ் மாற்று சிங்கம்மாள் என்ற பெண்மணியும், இரட்டைக் கவலை முறையை கடைப்பிடித்து வந்த மூக்கையா என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இருவரும் ஜாமீன் கேட்ட மனுவை புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி சத்யா விசாரணை செய்தார்.
அப்போது இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஆறாம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மேலும், நேரடியாக அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையம் ஒன்றையும் நீதிபதி அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.