புதுக்கோட்டை :: தச்சாங்குறிச்சி ஜல்லிக்கட்டுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுப்பு..!! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் பின்பற்றவில்லை என அனுமதி மறுப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தை அடுத்த தச்சாங்குறிச்சியில் இன்று நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததால் விழா கமிட்டியினரும் பொதுமக்களும் அரசு அதிகாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவில் அறிவுறுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை முறையாக அமல்படுத்தவில்லை எனக் கூறி தச்சாங்குறிச்சி நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் மூலம் டோக்கன் விநியோகம் செய்ய வேண்டும் என கூறியிருந்த நிலையில் விழா குழுவினரே 600 டோக்கன் வரை காளைகளுக்காக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா அதற்கான ஆர்.பி.சி.ஆர் சோதனை முறையாக மேற்கொள்ளவில்லை. ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் முழுமையாக நிறைவடையவில்லை. இதன் காரணமாக இன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க முடியாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எனவே அனைத்து நடைமுறைகளை முறையாக பின்பற்றப்பட்ட பிறகு மாற்று தேதி அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் விழா கமிட்டினர் கடும் அதிர்ச்சியை அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விழா கமிட்டினரும் பொதுமக்களும் கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கோட்டாட்சியர் முருகேசன், ஏடிஎஸ்பி கீதா, வட்டாட்சிய ராஜேஸ்வரி உள்ளிட்ட வாகனங்களை சிறை பிடித்து தச்சாங்குறிச்சி வாடிவாசல் அருகே போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukottai Jallikattu permission denial at the last minute


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->