இருட்டுக் கடையில் அல்வாசாப்பிட்ட ஸ்டாலினுக்கு, 9 மாதம் பசி, பட்டினியோடு மக்களை சந்திக்க நேரம் இல்லையா? - புதிய தமிழகம் கேள்வி!
Puthiya Thamilagam Condemn to DMK Govt
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாவட்டக் கள ஆய்வின் ஒரு பகுதியாக நெல்லை வந்துள்ளார். நேற்று (பிப். 6) டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடங்கிவைத்தார். இன்று அரசு மருத்துவக் கல்லூரி மைதான விழாவில் கலந்து கொண்டு புதிய திட்டங்களை அறிவித்தார்.
மாஞ்சோலை தொழிலாளர்களை முதல்வர் சந்திப்பார் என தகவல் வெளியாக, அவர்கள் இன்று காலை அவரை காண வந்தனர். முதல்வர் நேரம் ஒதுக்கினார் என்றபோதும், அவர் விழாவுக்குப் புறப்படும்போது வேனிலிருந்தே மனுக்கள் பெற்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள், அரசு விருந்தினர் மாளிகை முன்பு தர்ணா நடத்தி, "நேரம் ஒதுக்கியும் எங்களை சந்திக்கத் தவிர்ப்பது ஏன்?" என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இதுகுறித்த காணொளியை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள புதிய தமிழகம் கட்சி, "மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியும் சந்திக்க மறுத்த முதல்வர் ஸ்டாலின் - இருட்டுக் கடையில் அல்வா சாப்பிட நேரம் இருந்த ஸ்டாலினுக்கு, 9 மாதம் பசியோடும் பட்டினியோடும் போராடும் மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரமில்லை" என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
Puthiya Thamilagam Condemn to DMK Govt