காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா? - வெளியானது அதிரடி தகவல்.!
quarterly exam holiday will be extension
காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா? - வெளியானது அதிரடி தகவல்.!
தமிழகம் முழுவதும் தற்போது ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வு வருகிற 27ம் தேதி தேர்வு முடிவடைய உள்ள நிலையில் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை ஐந்து நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையில், மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தி உள்ளிட்டவை அரசு விடுமுறை நாட்களாகவும் சனி மற்றும் ஞாயிறு ஆகியவை வார இறுதி விடுமுறை நாட்கள் ஆகவும் உள்ளதால் பள்ளி மாணவர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்திலிருந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, "தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்குமான என்எஸ்எஸ் (NSS) சிறப்பு முகாமை காலாண்டு தேர்வு விடுமுறையின் ஏழு நாட்களில் நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறைகள் மேலும் நீட்டிக்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
English Summary
quarterly exam holiday will be extension