ரேபிஸ் பாதிப்பு.. 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்!
Rabies Outbreak Sixyear old girl dies in hospital
கேரள மாநிலத்தில் தெருநாய் கடித்ததில் காயமடைந்த 6 வயது சிறுமி ரேபிஸ் தாக்கப்பட்டு பரிதாபமாக பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தேஞ்சிப் பாலம் பெருவள்ளூர் காக்கத்தடம் பகுதியை சேர்ந்தவர் சல்மானுல் பாரிஸ்.6 வயதான இவரது மகள் சியா பாரிஸ்.கடந்தமாதம்29-ந்தேதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க சென்றபோது
ஒரு தெரு நாய் ஓன்று , சிறுமியை துரத்தி தலை, கால் உள்ளிட்ட இடங்களில் கடித்து குதறியது. சிறுமி மட்டுமின்றி அவரை காப்பாற்ற முயன்ற பெண் உள்பட 5 பேரையும் அந்த நாய் கடித்தது.
தெருநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமி, சம்பவம் நடந்த 2 மணி நேரத்திற்குள் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு வெறி நாய் கடிக்கான தடுப்பூசி போடப் பட்டது.
இந்தநிலையில் சிறுமி உள்ளிட்ட 6 பேரை கடித்த தெருநாய் அன்றைய தினம் மாலையில் இறந்துவிட்டது. இதனால் வெறிநாய் கடிக்கு போடப்பட வேண்டிய அனைத்து டோஸ் மருந்துகளும் சிறுமிக்கு போடப்பட்டுள்ளது.
இதையடுத்து 2 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு திரும்பிய சிறுமி சியானாள் டாக்டர்களின் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வந்தாள். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறுமிக்கு காய்ச்சல் வந்ததால் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள்.
அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமிக்கு ரேபிஸ் பாதித்திருந்தது தெரிய வந்தது. இதனால் சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில் வெறிநாய் கடிக்கான அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்ட நிலையில் சிறுமி இறந்து விட்டது அவளது குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்தது. வெறிநாய் கடித்த சிறுமி ரேபிஸ் நோய் தாக்கி பலியான சம்பவம் மலப்புரத்தில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Rabies Outbreak Sixyear old girl dies in hospital