"நமது போராட்டம் சாவர்க்கருக்கு எதிரானது இல்லை, மோடிக்கு எதிரானது" - ராகுல் காந்தி விளக்கம்!  - Seithipunal
Seithipunal


ஒரு சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராகுல்காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியரளர் சந்திப்பில், மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை, காந்தி என்று ராகுல்காந்தி தெரிவித்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. அம்மாநில அரசியல் தலைவர்கள் ராகுல்காந்திக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

மேலும், காங்கிரஸ்-திமுக கூட்டணியில் உள்ள முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். அதில், "வீர் சாவர்க்கரை இழிவுபடுத்துவதை பொறுத்துக் கொள்ள மாட்டேன்" என்று உத்தவ் தாக்கரே தெரிவித்து இருந்தார்.

மேலும், இந்த விவகாரத்தால் காங்கிரஸ், உத்தவ் இடையே மோதலாக வெடிக்கும் என்றும் சொல்லப்பட்ட நிலையில், ராகுல் காந்தி, உத்தவ் தாக்கரேவை தொடர்பு கொண்டு பேசி பிரச்சனைக்கு சுமுகமாக முடிவு கட்டியுள்ளதாக, உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மேலும், "நமது போராட்டம் சாவர்க்கருக்கு எதிரானது இல்லை, மோடிக்கு எதிரானது" என்று ராகுல் காந்தி கூறியதாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Savarkar issue Shiv Sena


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->