நெல்லை மேயராக சைக்கிள் ஓட்டிக்கொண்டு ராமகிருஷ்ணன்! - Seithipunal
Seithipunal


எளிமையான முறையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்து நெல்லை மேயராக திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பதவியேற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை மாநகராட்சியின் ஆறாவது மேயராக இருந்த சரவணன் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி புதிய மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் என்ற கவுன்சிலர் வெற்றி பெற்றார். அதனையடுத்து அவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுநிலையில் இன்று காலை நெல்லை மாநகராட்சியின் ஏழாவது மேயராக ராமகிருஷ்ணன் பதவியேற்பு விழா பெற்றது. இதற்கு ராமகிருஷ்ணன் மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு வீட்டிலிருந்து சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்து பதவி ஏற்று கொண்டதாக கூறப்படுகிறது. வரும் வழியில் நெல்லையப்பர் கோவில் மற்றும் விநாயகர் கோவில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். மாநகராட்சி கமிஷனர் சுகம் புத்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து மேயர்  ராமகிருஷ்ணனின் தாயார் மரகதம்மாள்  அவரது மகன் மேயர் ராமகிருஷ்ணனுக்கு செங்கோலை பரிசாக வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramakrishnan riding a bicycle as mayor of Nellai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->