இலங்கை அரசை கண்டித்து மீனவர்கள் நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.!
Rameshwaram fisherman strike against srilanka
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் நெடுந்தீவு அருகே ஒரு விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
அதேபோல் தலைமன்னார் அருகே மற்றொரு விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மொத்தம் 16 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கண்டித்து நாளை முதல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். கடந்த மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rameshwaram fisherman strike against srilanka