தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் தரவரிசைப்பட்டியல் தரவரிசை பட்டியல் வெளியீடு..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் தரவரிசைப்பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு ( BVSc & AH ) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான BTech ( உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு / கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு / பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு ) தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியல் இன்று 02.02.2022 ( புதன்கிழமை ) வெளியிடப்பட்டது .

தரவரிசைப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் பட்டியல் ( இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு ( BVSc & AH ) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்பு ( BTech ) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியலை ( BVSC & AH மற்றும் BTech ) பல்கலைக்கழக இணையதளத்தில் ( www.tanuvas.ac.in அல்லது www2.tanuvas.ac.in ) காணலாம் .

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ( Offline / Online Counselling ) விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rankings at Tamil Nadu University of Veterinary Sciences


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->