நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - 8 போலீஸ் அதிகாரிகள் பலி
rebels kill 8 police officers in Nigeria
தென்கிழக்கு நைஜீரியாவில் காவல் நிலையங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி குழுக்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற 25ஆம் தேதி நைஜீரியாவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் தென்கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு காவல் நிலையங்கள் மீது அடுத்தடுத்து கிளர்ச்சியாளர்கள் குழு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் அம்பாரா மாகாணத்தில் உள்ள இரண்டு காவல் நிலையங்கள் மீது குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் எட்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களில் மூவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல் செய்து தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் தென்கிழக்கு பிராந்தியத்திற்கு சுதந்திரம் கோரி வரும் பியாஃப்ராவின் பழங்குடி மக்கள் என்ற பிரிவினைவாதக் குழு இந்த தாக்குதல்கள் நடந்ததியதாக காவல்துறை குற்றம் சாடியுள்ளனர்.
English Summary
rebels kill 8 police officers in Nigeria