ஒரு வாரம் தான் டைம்.. அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவுத் துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அனைத்து ஊழியர்கள் தங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள சொத்து விவரங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பத்திரப்பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் "17.07.2023 மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் W.P. Nos.2711 & 2719 of 2019, 3177 of 2020 and W.M.P no.3683 of 2020 dated 17.07.2023 என்ற வழக்கில் பதிவுத்துறை தலைவர் ஆஜானபோது மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் பத்திரப்பதிவுத் துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களின் சொத்து அறிக்கையைப் பெற்று சரிபார்க்க உத்தரவிட்டதற்கு இணங்க உரிய சுற்றறிக்கை 17.07.2023 அன்று பிறப்பிக்கப்பட்டது.

அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள் 1973 விதி 7(3)ல் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய சொத்து அறிக்கையினை ஒவ்வொரு 5 ஆண்டு கால இடைவெளியில் உரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரவின் உட்பிரிவு 7(3)(a)ல் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமக்கு முன்னோர் வழியாக கிடைத்த அல்லது தமக்கு சொந்தமான அல்லது குத்தகை அல்லது அடமானம் மூலம் தன்னுடைய அல்லது தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் அல்லது மற்றவரின் பெயரில் உள்ள அசையா சொத்து"

சார்பதிவாளர் அதற்கு மேல் உள்ள அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் (தாய், தந்தை, சகோதரர், சகோதரி, கணவன்/மனைவி மகன் மற்றும் கணவன்/மனைவி-ன் தாய், தந்தை மற்றும் சகோதரர், சகோதரி) மற்றும் தொடர்புடைய நபர்கள் ஆகியோரது சொத்து அறிக்கையை ஆதார் எண் மற்றும் நிரந்தர கணக்கு எண் இணைத்து ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள்/துணைப் பதிவுத்துறை தலைவர்கள்/ பதிவுத்துறை தலைவரிடம் 25.07.2023க்குள் சமர்ப்பிக்க சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Registration dept ordered to staffs submit property details


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->