ஃபெஞ்சல் புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரணம்: திமுக எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் வழங்கினர்!
Relief to Fenchal cyclone victims DMK MLAs given one month salary
சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க தமிழக துணை முதல்வர் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கினர்.
மழை, புயலால் பெருமளவு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப்பணிகளை மேம்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது ஒரு மாத எம்எல்ஏ ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியதுடன், திமுக எம்எல்ஏக்களும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத்தலைவர், திமுக எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஒரு மாத ஊதியமான ரூ.1.30 கோடி மதிப்பில் வங்கி வரைவோலை மற்றும் காசோலைகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வழங்கினார்.
தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய பகுதிகள் ஃபெஞ்சல் புயலால் மிகுந்த பாதிப்படைந்துள்ளன. இந்த பிரச்சினையை சமாளிக்க தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிகழ்வில் அமைச்சர் துரைமுருகனுடன், அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர். இது தமிழக அரசு செயல்படுவது சமூகபாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மையில் தன்னலமற்ற முயற்சியாகும்.
English Summary
Relief to Fenchal cyclone victims DMK MLAs given one month salary