ஜெ.தீபாவுக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்ததா? - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா-மாதவன் தம்பதியினருக்கு நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தது. இதற்காக இருவரும் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தனர். இந்த நிலையில் தீபாவுக்கு வாடகைத்தாய் மூலம் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அந்த குழந்தை எப்படி பிறந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஐந்து வருட சிகிச்சைக்கு பிறகு தீபாவுக்கும் மாதவனுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு முன் பலமுறை கருத்தரித்த நிலையிலும் குழந்தை பிறப்பதில் சிக்கல் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தை பெற்றுக் கொள்வதற்காக அரசியலில் இருந்து விலகுவதாகவும் ஜெ.தீபா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் வேளச்சேரி உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெ.தீபாவுக்கு குழந்தை பிறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தற்பொழுது ஜெ.தீபா சென்னையில் உள்ள தனியா மருத்துவமனையில் குழந்தையுடன் அவசரப் பிரிவில் இருப்பதாக தெரிகிறது. சில தினங்களில் என்ன குழந்தை பிறந்துள்ளது என்பது பற்றி அவர்களே அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளதால் அதனை கவனமாக வளர்க்க வேண்டும் என ஜெ.தீபா-மாதவன் தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.

ஜெ.தீபா மற்றும் மாதவனுக்கு அரசியல் ரீதியிலும், சொந்த காரணங்களுக்காகவும் சில மிரட்டல்கள் உள்ளதால் இது குறித்தான தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. சில தினங்களில் இதுகுறித்து ஜெ.தீபா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reported Deepa has given birth to a child


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->