குப்பைக்கொட்ட சென்ற போது ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு ஏற்பட்ட விபரீதம்.. போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவில் இளங்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் (வயது80) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

 இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் காளியம்மாள் வீட்டிலிருந்த குப்பைகளை ரோட்டின் மறுபுறத்தில் கொட்டுவதற்காக சாலையை கடந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த லாரி காளியம்மாள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த காளியம்மாளை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Retired teacher death in lorry accident in thenkasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->