அண்ணன் கொலையில் பழிக்கு பழி தீர்த்த சம்பவம்.. பாம் சரவணனை ஆந்திராவுக்கு அழைத்து சென்று விசாரிக்க முடிவு!
Revenge for brothers murder Pam Saravanan to be taken to Andhra Pradesh for interrogation
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பிரபல ரவுடி பாம் சரவணனை கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் ஆந்திர மாநிலம் கூடூர் அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.இதையடுத்து அதை வீடியோவாக பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு, பகுதியை சேர்ந்த பிரபல பாம் சரவணன் மீது 6 கொலை, கொலை முயற்சி வழக்கு , வெடி குண்டு வீசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 2015-ம் ஆண்டு வெங்கல் பகுதியில் இவரது சகோதரரும் அரசியல் கட்சி ஒன்றின் மாவட்ட செயலாளருமான தென்னரசு என்பவர் கடந்த மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து தனது அண்ணனை கொலை செய்த கும்பலை பழி தீர்க்க திட்டம் தீட்டி வந்த பாம் சரவணன் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் திடீரென தலைமறைவானார். இந்தநிலையில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த பாம் சரவணனை கடந்த 15-ந் தேதி புளியந்தோப்பு பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்து போலீசார் இடது காலில் சுட்டு பிடித்தனர்.
இதில் காயமடைந்த அவருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும்நிலையில் வருகிறது. தனது அண்ணன் தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடைய கோயம்பேட்டை சேர்ந்த ரவுடியான செல்வம் என்கிற பன்னீர்செல்வத்தை கடந்த 2018-ம் ஆண்டு பாம் சரவணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி சென்று ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள ஆற்றங்கரை யோரம் வைத்து கொன்று எரித்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பாம் சரவணனை கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் ஆந்திர மாநிலம் கூடூர் அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.இதையடுத்து அதை வீடியோவாக பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.
English Summary
Revenge for brothers murder Pam Saravanan to be taken to Andhra Pradesh for interrogation