தர்மபுரி ||எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தற்கொலை -.5 லட்சம் நிவாரண உதவி .. தமிழக அரசு அறிவிப்பு…!
Rs 5 lakh relief aid to the family of a farmer who committed suicide by protesting against the installation of a gas pipeline
தற்கொலை செய்து கொண்ட விவசாயி கணேசன் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
தர்மபுரி மாவட்டம், கரியப்பனஅள்ளி கிராமத்தில் கெயில் எரிவாயு குழாய் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது, கணேசன் என்பவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை மீட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே கணேசன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
அவர் உயிரிழந்த செய்தியைக் கேட்ட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்றார். உயிரிழந்த விவசாயி கணேசன் குடும்பத்தாருக்கு, தனது ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார். கருணாநிதி வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும் என்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rs 5 lakh relief aid to the family of a farmer who committed suicide by protesting against the installation of a gas pipeline