ஏலச்சீட்டில் ₹48 லட்சம் மோசடி.. கணவர் கைது, மனைவிக்கு எஸ்கேப்.!! வலை வீசி தேடும் போலீஸ்.!! - Seithipunal
Seithipunal


சென்னை ஆவடி அடுத்த திருவேற்காடு அன்பு நகரை சேர்ந்த பரமேஸ்வரி என்பவர் கடந்த 2019ம் ஆண்டு ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரில்  'நான் தனியார் கம்பெனியில் வேலை செய்தபோது, என்னுடன் வேலை செய்த திருவேற்காட்டை சேர்ந்த சதாசிவம் மற்றும் அவரது மனைவி சவுபாக்கியம் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவன், மனைவி இருவரும் கடந்த 2019ம் ஆண்டு ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி மளிகை பொருட்கள் சீட்டு நடத்தினர்.

இவர்களிடம் நான் உட்பட 20க்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்ட் சீட்டு போட்டிருந்தோம். இந்நிலையில் நங்கள் செலுத்திய ஏலச்சீட்டு பணம் ரூ.48 லட்சத்துடன் இருவரும் தலைமறைவாகி விட்டனர். எனவே, இருவரையும் கைது செய்து நாங்கள் கஷ்டப்பட்டு கட்டிய ஏலச்சீட்டு பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவேண்டும்" என புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின்பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் சுபாஷினி வழக்குப்பதிவு செய்து தம்பதியை தேடி வந்த நிலையில் ஏலச்சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி துரைப்பாக்கம் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படியில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சதாசிவத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பிச்சென்ற இவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rs48lakh fraud case Husband arrested wife escapes in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->