சென்னையில் சிக்கிய பல வாகனங்கள்.. ரூ.500 அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு போக்குவரத்து விதிகளின்படி வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் விதிமுறை மீறல்கள் குறித்து போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சென்னை காவலர் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள வாகன நிறுத்த இடங்களில் வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டி வேலு தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறி நம்பர் பிளேட் உள்ள வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதில் போக்குவரத்துத் துறையினர் மற்றும் காவல் துறையினர் வாகனங்களாக இருந்தாலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டி வேலு கூறுகையில் "சென்னையில் உள்ள பெரும்பாலான இடங்களில் மாறுபட்ட நம்பர் பிளேட்டுகளை கொண்ட மற்றும் நம்பர் பிளேட்டுகள் சரியாக இல்லாத வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம். 

அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் கடந்த ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. எங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. கடந்த ஒரு மாத காலமாக அனைவருக்கும் நம்பர் பிளேட்டுகளை மாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே பல வாய்ப்புகள் கொடுத்தும் நம்பர் பிளேட்டுகளை மாற்றாதவர்களுக்கு இன்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs500 fine for vehicles with incorrect number plates in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->