பெண் சிசுக்களை குறி வைத்து கருக்கலைப்பு... அரசு செவிலியரால் சிவகங்கையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழையனூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இருப்பினும் மீண்டும் கர்ப்பமடைந்த காயத்ரி கருவில் இருப்பது பெண் குழந்தை தானா என்பதை முன்கூட்டியே கண்டறிய மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சார்ந்த விருப்ப ஓய்வு பெற்ற அரசு செவிலியர் காந்திமதி என்பவரை அணுகி உள்ளார்.

இதையடுத்து காந்திமதி சோழவந்தான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காயத்ரியை அழைத்துச் சென்று ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது மூன்றாவதும் பெண் குழந்தை என்று உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் காந்திமதி, காயத்ரியிடம் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு அவரது வீட்டிலேயே வைத்து கருக்கலைப்பு செய்துள்ளார்.

இதனால், காயத்ரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது காயத்ரி கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. இந்தக் கருக்கலைப்புத் தொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை மாவட்ட சுகாதாரத் துறையினர் காந்திமதியின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். 

அப்போது, காந்திமதி விருப்ப ஓய்வு பெற்று கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக பெண் சிசுக்களை கருவிலேயே கலைக்கும் பணியை செய்துவந்தது தெரியவந்துள்ளது.
அவரைக் கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rtd government nurse arrest for girl baby abortion in sivakangai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->