'அம்மா' உணவகப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - ஊதிய உயர்வு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal



மலிவு விலையில் உணவுகளை வழங்கும் "அம்மா உணவகம்", கடந்த 2013 ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி சென்னை சாந்தோமில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப் பட்டது. இதையடுத்து அதே நாளில் சென்னையில் மேலும் 15 இடங்களிலும் இந்த அம்மா உணவகங்கள் திறக்கப் பட்டன. 

இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் முன் மாதிரியாக தமிழகத்தில் தொடங்கப்பட்ட இந்த மலிவு விலை உணவகமான அம்மா உணவகம் அடுத்தடுத்து மாநிலத்தின் பல்வேறு மாநகராட்சிகளிலும் தொடங்கப் பட்டன. இந்நிலையில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதால், அம்மா உணவகத்தை மேம்படுத்துவது குறித்து சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. 

அதன்படி அம்மா உணவகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலி ரூ. 300 ல் இருந்து ரூ. 325 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தான் கடைசியாக இந்த உணவகப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகான இந்த ஊதிய உயர்வுக்காக சென்னை மாநகராட்சிக்கு ரூ. 3.07 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிய வந்துள்ளது. முன்னதாக 2013ல் இருந்து  2016ம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் சுமார் 400 அம்மா உணவகங்கள் திறக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salary Hike Notification For Amma Restaurant Employees


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->