சேலம் கொடூர விபத்து - ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!
Salem Sukkampatti Road Accident CM MKStalin EPS
சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி கிராமத்தில் இரண்டு இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த முருகன் (வயது 30), நந்தினி (வயது 25), வேதவள்ளி (வயது 28) மற்றும் ஒரு வயது குழந்தை கவின் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து உள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க மு.க.உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "சேலம் மாவட்டம் சுக்கம்பட்டியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் எப்போதும் தவறாமல் தலைக்கவசம் அணிந்து, உரிய சாலை விதிமுறைகளை கவனமாகப் பின்பற்றி, பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும்" என்று எடப்பாடி கே பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
Salem Sukkampatti Road Accident CM MKStalin EPS