முடிவெட்ட சென்ற இடத்தில், வேலையை காட்டிய  வட மாநில நபர்.. சற்று நேரத்தில் நிகழ்ந்த விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


காட்பாடி வணிக வளாகத்திற்கு அருகில் கடந்த ஆகஸ்ட் 22 -ல் ஒரு நபர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த 34 வயதான அபணிசரண்யா என்பது தெரியவந்துள்ளது. 

அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது குறித்து போலீசாரின் விசாரணையில் அவரை கொன்றது கீழ் பெண்பாக்கம் பகுதியில் சலூன் கடைக்காரரான விஜயராகவன் என்ற 26 வயது இளைஞர்தான் கொலை செய்தது என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிசிடிவி காட்சியில் அந்த வட மாநிலத்தவர் ஒரு சலூன் கடைக்குள் நுழைகிறார். பின்னர் 40 நிமிடங்களுக்கு பின் தனது கழுத்தில் கையை வைத்துக்கொண்டு வெளியில் வருகிறார். இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்தவர் சற்று நேரத்திற்கு முன்பு முடி திருத்தம் செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சலூன் கடையில் போலீசார் விசாரணை நடத்திய போது கடைக்காரரான விஜயராகவனுக்கும் வட மாநில நபருக்கும் தகராறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. 

முடி வெட்டிக்கொண்ட வட மாநில நபர் அதற்காக பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால், தகராறு ஏற்பட்டதில் சவரக்கத்தியை வைத்து அந்த வட மாநில நபரை விஜயராகவன் கழுத்தில் அறுத்துள்ளார். இதன் பின்னர் அங்கிருந்து வட மாநில நபர் வெளியேறிய நிலையில் அவரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saloon Shop in owner killed North Indian in kadpadi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->