#BREAKING || ரூ.4 கோடி பறிமுதல் - தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக நிர்வாகிகிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் "தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட நான்கு கோடி ரூபாய் தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ள வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறை தான் விசாரணை செய்வார்கள். பறிமுதல் தொடர்பான அனைத்து தகவலும் வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்வார்கள்" என விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Satya pradha saago explain about rs4crs seized in Chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->