என்னாச்சு? சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


காவல்துறையினரையும் பெண் காவலர்களையும் இழிவாக பேசியதாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரால் தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை சிறையில் பிளாஸ்டிக் பை பால தாக்கப்பட்டதாக அவரது தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம் சாட்டியதோடு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதியிடம் முறையீடு செய்திருந்தார். 

அதேபோன்று சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்படுவதாக அவரது தாயார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து கோவை சட்ட சேவைகள் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவுகளின் அடிப்படையில் கோவை சைபர் காயின் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தற்போது கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று கஞ்சா வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆசைப்படுத்தப்பட்ட போது வலது கையில் கட்டு போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar admitted in Coimbatore govt hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->