கையை உடைத்தது இவர்தான்‌‌.. "நான் சிறையில் கொல்லப்படுவேன்".. பகீர் கிளம்பிய சவுக்கு சங்கர்.!! - Seithipunal
Seithipunal


பெண் காவலர்களை இழிவு படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூப் சவுக்கு சங்கர் மருத்துவ பரிசோதனைக்காக இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கருக்கு வலது கையில் மீண்டும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, மீண்டும் மாவு கட்டு போடப்பட்டது. 

அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் போலீஸ் வாகனத்தில் ஏற்றுவதற்காக அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கர் காவலர்கள் முன்னிலையில் "கோவை சிறைக் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தான் எனது கையை உடைத்தார். கோவை சிறையில் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்" என போலீசார் முன்னிலையில் சவுக்கு சங்கர் முழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர் காவல் ஆணையர் உத்தரவின்படி குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. தற்போது வரை சவுக்கு சக்கரம் மீது கஞ்சா வழக்கு உட்பட ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar alleged he will be killed in Coimbatore jail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->