அந்த கடிதம்.. 66 உயிர்.. வாராகி கைது..! சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal


சிறையிலிருந்து இன்று விடுதலையான சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "திராவிட முன்னேற்ற கழக அரசை எதிர்த்து எதுவும் பேசக்கூடாது, திமுக அரசுக்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதை நிபந்தனையாக கூறினார்கள். 

இந்த நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால், நாங்கள் உடனடியாக உங்களை விடுவிப்போம். அதை மீறினால் நாங்கள் ஒரு வருடத்திற்கு உங்களை சிறையில் இருந்து வெளியே வர விடமாட்டோம் என்று கடுமையான நெருக்கடி கொடுத்தார்கள்.

இன்று நடக்கும் உண்மைகள் எந்த வகையிலும் வெளியே வந்து விடக்கூடாது என்பதில் தமிழக முதல்வர் மற்றும் அவரது மகன் உதயநிதி மிகக் கவனமாக இருக்கின்றனர். 

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் 66 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்தது அத்தனை பேருக்கும் நினைவிருக்கும். அந்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருவதும் உங்களுக்கு தெரியும்.

கடந்த டிசம்பர் 2023 தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள், தமிழகத்தில் சட்டவிரோதமாக மெத்தனால் சர்வசாதாரணமாக கடத்தப்படுகிறது. உடனடியாக இது தடுக்கப்பட வேண்டும், அப்படி தடுக்கவில்லை என்றால் மரக்காணத்தில் ஏற்பட்டது போன்ற கள்ளச்சாராய சாவுகள் ஏற்படுவதை தடுக்க முடியாது என்று உள்துறை செயலாளர்க்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்த கடிதத்தின் மீது, உள்துறைக்கு பொறுப்பாக இருக்கக்கூடிய தமிழகம் முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தார் என்றால், 66 உயிர்கள் பலியாகி இருக்காது.

இதுபோல பல்வேறு உண்மைகள் தமிழக மக்களுக்கு தெரியாமல் மறைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக தான் சவுக்க மீடியா முடக்கப்பட்டது. 

நான்கு நாட்களுக்கு முன்பாக தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் அவர்கள் மீது பாஸ்போர்ட் ஊழல் தொடர்பாக பொதுநல வழக்கை தொடர்ந்த வாராகி என்ற பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை அவர் கைது செய்யப்பட்ட விவரம் பொதுவெளியில் தெரிவிக்கப்படவில்லை. அவர் மீதும் குண்டர் சட்டம் போடும் நடவடிக்கைகளை சென்னை மாநகர காவல் துறை எடுத்து வருகிறது" என்று சவுக்கு சங்கர் தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar Press meet today DMK MKStalin


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->