#BREAKING || எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


குற்ற வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு சமூக ஆர்வலர்களும், பாஜக வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்தியா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீண்ட வருடங்களாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வுகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமைக்க வேண்டும்.

வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட நீதிபதிகளிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிக்கை கேட்கலாம். மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்ற வழக்குகளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்காணிக்கலாம். மாவட்டம் வாரியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளுக்கென தனியாக இணையதளம் உருவாக்கி அதில் முழு விவரத்தையும் பதிவேற்றம் செய்ய உயர் நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC ordered to finish cases against MPs and MLAs quickly


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->