#திருவண்ணாமலை || உயர்கல்வி தொடர சாதிச் சான்றிதழ் வழங்காததால் பட்டியலின மாணவி தற்கொலை.!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்தவர் முருகனின் மகள் ராஜேஸ்வரி. முருகன் இறந்து விட்டதால் தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். பட்டியலின வகுப்பில் பன்னியாண்டி சமுதாயத்தை சேர்ந்த ராஜேஸ்வரி 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் உயர்கல்வி பயிலும் கனவோடு கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார். பன்னியாண்டி சமுதாயத்துக்கு வழங்கப்படும் எஸ்.சி சாதி சான்று இல்லாததால் ராஜேஸ்வரியின் உயர் கல்வி கேள்விக்குறியானது. இதனை அடுத்து திருவண்ணாமலை வருவாய் துறையிடம் சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி கடந்த 17ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இத்தனை கண்ட அக்கம்பக்கத்தினர் ராஜேஸ்வரியை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரின் உடல்நிலை திடீரென நேற்று மோசமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC student commits suicide as caste certificate was not issued


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->