கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார் .!
Scheme of giving Rs.1000 to college girls CM M.K.Stalin start
தமிழகத்தில் பெண்கள் கல்வி கற்பதை ஊக்கிவிக்கும் விதமாகவும் பெண் கல்விக்கு உதவும் விதமாகவும் தமிழக அரசு புதுமைப்பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த புதுமைப் பெண் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் 1,16,342 கல்லூரி மாணவிகள் பயனடைந்து வருவதாக அரசு அறிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் பாதியில் நின்ற பனிரெண்டாயிரம் மாணவிகள் மீண்டும் உயர்கல்வி பயில்வதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் 1,04,347 மாணவிகள் பயன் பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Scheme of giving Rs.1000 to college girls CM M.K.Stalin start