கொட்டித் தீர்க்கும் மழை - நாகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
school and colleges leave in nagapatinam for rain
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக அடுத்த நான்கு நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விடுமுறை குறித்து அறிவித்தார்.
English Summary
school and colleges leave in nagapatinam for rain