கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படும் கல்வித்துறை அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal



அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதிப் படுத்தவே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு 'கல்வி உரிமைச் சட்டம்' கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு 1 முதல் 8 ம் வகுப்பு வரை இலவச கல்வி பெறுவதற்கான கட்டணத்தை அரசே செலுத்தி விடும்.

ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் இதற்காக 25% இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம் இருந்து எந்த கட்டணமும் பள்ளி நிர்வாகம் பெறுதல் கூடாது என்று இந்த சட்டம் சொல்கிறது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த சட்டத்தில் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 2, 545 இடங்களில் 1, 711 மாணவர்கள் மட்டும் தான் சேர்க்கப் பட்டுள்ளனர் என்றும், 834 இடங்கள் நிரப்பப் படாமல் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் ஆளுங்கட்சி எம்எல்ஏ பரிந்துரைக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் இடம் ஒதுக்கப் படுவதாகவும், அதோடு மாணவர்களிடம் பள்ளி நிர்வாகங்கள் சீருடை, புத்தகம், பிற உபகரணங்கள் என்று அனைத்திற்கும் கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கல்வித் துறை அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் மீண்டும் அரசுப் பள்ளிக்கே திரும்பிச் செல்லும் அவல நிலை நிலவுகிறது. மேலும்  அப்படி பள்ளி மாறும் மாணவர்களுக்கு எமிஸ் எண்ணை வழங்காமல், அம்மாணவர் அப்பள்ளியிலேயே படிப்பதாக காட்டி மாணவருக்கு அரசு தரும் கட்டங்களை பள்ளி நிர்வாகங்கள் பெற்று மோசடியில் ஈடுபடுவதாகவும் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School Education Officials Supporting Private School In RTE Admissions


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->